// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்திய-இலங்கை கடல் பகுதிகளில் தீர்வு மையங்கள்; முன்னாள் முதலமைச்சர் வேண்டுகோள்

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் , இரு நாட்டுக்கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க மத்திய அரசை தி.மு.க வற்புறுத்தும் என அவர்களின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பினும் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முடிந்த நிலையில் இதற்கான முயற்சியை எடுத்ததாகத்தெரியவில்லை என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட , வழக்கமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் , தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங் கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் , படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங் களாக தொடர்ந்து வருகின்றமை வேதனையளிக்கின்றது.

தமிழக மீனவர்க ளின் 95 படகுகள் லங்கை வசம் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் , இந்தியக் கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங் கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதற்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் இலங்கை கடற்படையின் இது போன்ற தொடர் துன்புறுத்துதல்களைப் பார்க்கும்போது , இந்திய மீனவர்கள் மீன்பிடித்தொழிலையே கைவிடும் அளவுக்கு அவர்கள் மனதில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இலங்கை செயல்படுகிறதோ என்ற அச்சம் மீனவ மக்களிடையே நிலவுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் , தமிழக மீனவர்கள் கடலில் தங்களுடைய உயிருக்கும் , உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற தன்மை உருவாக் கப்பட்டுள்ளது . இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடு தலை செய்யப்பட வேண்டும் அவர்களுடைய படகுகள் உட னடியாக திருப்பி அளிக்கப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களையும் , அவர்களது படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக நான் வெளியுறவுத் துறை அமைச்ச ருக்கு கடிதங்களை எழுதியுள்ளேன் . தமிழக முதல்வரும் அவ்வப்போது கடிதங்களை எழுது கிறார் . இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும் , அவர்களுடைய படகு கள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும் , அவர்கள் எவ்வித அச்சமுமின்றி இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும் என்றுள்ளது .


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்