// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அமைச்சுப் பதவிக்காக அடிபடும் மொட்டுக் கட்சி

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் , முன்னதாகவே இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கொடுத்த அழுத்தமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஜனாதிபதியை சந்தித்த மொட்டு கட்சியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு மீண்டும் அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதன்படி இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் இந்த அரச அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்