// print_r($new['title']); ?>
day, 00 month 0000

எல்லைக்குள் நுழைந்த சீன ஆளில்லா விமானங்களை சுட்டு விரட்டிய தாய்வான்!

தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா விமானங்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தாய்வான் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியது.

தாய்வான் கின்மென் தீவுக்கு மேலே நேற்று 3 ஆளில்லா விமானங்கள் பறந்தன. அவற்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்த 3 ஆளில்லா விமானங்களும் மீண்டும் சீனா பகுதிகளை நோக்கி சென்று மறைந்ததாக கின்மென் பாதுகாப்புக் கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தாய்வான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறிவரும் சீனா, அடிக்கடி தனது விமானங்களை தாய்வான் வான் பாதுகாப்பு எல்லைக்குள் அனுப்பி தாய்வானை எரிச்சலூட்டி வருகிறது. ஆனால் தாங்கள் எந்தவொரு நாட்டின் பகுதியும் இல்லை. சுதந்திரமான தனி நாடு என தாய்வான் கூறி வருகிறது.

இந்த நிலையில் தாய்வானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் சென்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது. நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்துக்குப் பின்னர் அந்த பிராந்தியத்தில் சீனா தமது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக தாய்வான் ஜலசந்தியை சூழ்ந்து சீனா அதி தீவிரமாக போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது.

சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு மத்தியில் அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் தாய்வான் ஜலசந்தியில் முகாமிட்டதால் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே தாய்வானுக்குள் சீனாவின் ஆளில்லா விமானங்கள் அத்துமீறி பறந்தன. இதனையடுத்து எச்சரிக்கை தரும் வகையில் வானை நோக்கி தாய்வான் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்