மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலையின் 33 ஆவது நினைவு தினம் நேற்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட தூபியில் மாலை 5.45 இற்கு ஆரம்பிக்கபட்ட நினைவு தினம் 9.00 மணியளவு வரை நடைபெற்றது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அந்த தூபியிலே மலர்மாலை சூடி, ஒளி தீபம் ஏற்றினார்கள்.
இதில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், பொது மக்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது ஜனாதிபதிக்கு ஊடகங்களினூடாக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.