மீரிகம - வில்வத்தை பகுதியில் கொள்கலனொன்று ரயிலுடன் மோதுண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், வடக்கு மற்றும் மலையக ரயில் மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த 'பௌஃபி கர்லயால' புகையிரதத்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.
ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரத சிக்னல்கள், மின்கம்பங்கள், புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தால், ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன.
இதனால் பல ரயில் சேவைகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.