day, 00 month 0000

மூன்றாம் வகுப்பிற்கு பின்னர் மாணவிகள் கல்வியை தொடர தடை விதித்த தலியான்கள்

ஆப்கானிஸ்தானில் வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதை தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கல்வியை தொடர தடை விதிக்குமாறு தலிபான் அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமையிலான ஆட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, , செப்டம்பர் 2021 இல் பெண்கள் இடைநிலைக் கல்வியை தலிபான் அமைப்பினர் தடைவிதித்தனர்.

உயர்நிலை கல்வியை தொடர ஆண்களுக்கு மட்டுமே அனுமதியளித்தனர்.

இதேவேளை கடந்த டிசம்பரில், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகம் செல்லும் பெண்களுக்கு தலிபான் அமைப்பு தடை விதித்ததுடன்,ஆயிரக்கணக்கானோருக்கு பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்தது.

அத்துடன் உடற்பயிற்சி நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்கள் பூங்காக்கள் மற்றும் சந்தைகள் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வெளியில் செல்லும்போது தமது முகங்களை மறைப்பது கட்டாயமாகும் எனவும் தலிபான் அமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்