இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்வேலை தமிழ் முற்போக்குக் கூட்டணி சந்திக்கவுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், மனேகணேசன், பிரதி தலைவர் வே.இராதாக்கிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகுமார், வேலுகுமார் உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதியில் இந்தியா முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மலையக மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க 3000 மில்லியன் இந்திய ரூபாவை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.