பாகிஸ்தான் மாவட்டம் பஜூரின் தலைநகர் Khar புறநகரில், மதகுரு மற்றும் அரசியல் தலைவரின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் திடீரென இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது.
இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாம், குரான் மற்றும் பாகிஸ்தானுக்காக இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் பிரதமர் ஷிவாஸ் செரிப் தெரிவித்திருந்தார்.
இதுவரை அந்த குண்டு வெடிப்புக்கு யாரும் பொருப்பேற்கவில்லை எனவும் அறியமுடிகின்றது.
இதற்கிடையில் மனித வெடிகுண்டு மூலம் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.