// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜெனீவாவில் தமிழர் தரப்பு மாபெரும் போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு செப்டம்பர் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் அணிதிரள இருக்கின்றோம் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

ஜெனிவாவிலுள்ள முருகதாசன் திடலில் இந்த மாபெரும் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

'முதன் முதலாக எங்களுடைய தாயக மண் ஈழத்தில் இருந்தும், ஈழத்துக்கு ஆதரவான நாடுகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இன உணர்வாளர்கள் என்ற வகையில் முதன்முறையாக ஒரு மாநாடு ஒன்றை நடத்தி அதன்மூலம் ஒரு பட்டயம் ஒன்றை வெளியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

செப்டம்பர் 12ஆம் திகதி மாலை 02 மணிக்கு கூடுகின்ற இந்த நிகழ்வில் அத்தனை நாடுகளிலும் இருந்து எங்களுடைய நீதிக்காக தோள் கொடுக்கின்ற அல்லது நீதி கோருகின்ற எங்களுடைய பயணத்தில் சேர்ந்து பயணிக்கின்ற அத்தனை பேரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் அன்போடு உங்களை அழைக்கின்றோம்.

ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று இத்தனை வருடகாலம் நாங்கள் போராடிய பின், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் ஈழத் தமிழர்களுக்கு என்ன தீர்வை கொடுக்கப் போகின்றனர் என்ற வகையில் எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்த நேரத்தில், ஈழத் தமிழர்கள் ஒருமித்த குரலில் தாயகத்திலிருந்து அங்கு வருகைதந்து உங்கள் அனைவருடைய கைகளையும் நாங்கள் இறுகப்பற்றிக்கொண்டு நாங்கள் எங்களுடைய இன அழிப்புக்கான நீதி கோருகின்ற எங்களுடைய பட்டயத்தை வெளியிடுவதற்கு இருக்கின்றோம்.

அந்த வகையில் தான் நாங்கள் அண்மையில் “இன அழிப்புக்கு எதிரான கூட்டமைப்பு” என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கின்றோம்.

நிச்சயமாக இந்த நீதி கோருகின்ற பயணத்தில் அத்தனை உறவுகளும் எங்களுடன் சேர்ந்து தோளோடு தோள் நின்று இந்த நிகழ்வை சிறப்பிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்றார்.

இதேவேளை, இந்த எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் செப்டம்பம் 12 ஆம் திகதி மதியம் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் மட்டக்களப்பு மாநரக சபை முதல்வர் தி. சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்