கனடாவில் காட்டுத் தீ காரணமாக கண் நோய்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வகையிலான கண் நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் ஒன்றாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுத் தீ தாக்கம் ஏற்பட்டுள்ளது.
புறச்சூழலில் நடமாடும் போது கண்களில் எரிச்சல் நிலை ஏற்பட்டால் அது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக வளி மாசடைவதாகவும் இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்று மாசடைதல் காரணமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் கண் அழற்சி நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்களில் இரசாயனப் பதார்த்தங்கள் படுவதனால் பின்க் ஐ எனப்படும் ஓர் கண் அழற்சி நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.