// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வெளியில் வந்தவுடன் பதவி

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் பிரபல்யப்படுத்துவது தொடர்பான தூதுவராக நியமித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மனுஷ நாணயக்கார வழங்கியுள்ள இந்த பதவியை ரஞ்சன் ராமநாயக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

“இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதுவர்” என்பது இந்த பதவியின் பெயர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலக தொழிலாளர்கள் தொடர்பாக குரல் கொடுத்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்