// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தடை நீக்கம் சட்டவிரோதமானது

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை விதிப்பு மற்றும் தடை நீக்க செயன்முறைகள் சட்டவிரோதமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் அமைப்புக்களும் தனிநபர்களும் பயங்கரவாத தடை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே சுமந்திரன் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் குறித்த நபர்களும் அமைப்புக்களும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதோடு தடை செய்யப்படுவதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.

எனினும் அவ்வாறான சட்ட ரீதியான செயல்முறைகள் எதுவும் சிறிலங்கா அரசாங்கத்தினரால் பின்பற்றப்படவில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது வர்த்தமானியின் மூலம் விதிக்கப்பட்ட தடை மற்றும் தடை அகற்றப்பட்டமையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஏனெனில், அவை அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான செயல்பாடுகள் " எனக் குறிப்பிட்டார்.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்