day, 00 month 0000

மேல் மாகாணத்திலுள்ள உயரமான கட்டடங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு..! பேராசிரியர் எச்சரிக்கை

தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேல் மாகாணத்திலுள்ள உயரமான கட்டடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் நாட்டிலுள்ள புதிய மற்றும் பழைய உயரமான கட்டடங்களை வகைப்படுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக் கையில்,

அண்மையில் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்நிலையில் மேற்படி கட்டடங்கள் நிலவமைப்புக்கு ஏற்ப வடிவமைக் கப்பட்டுள்ளனவா மற்றும் நில நடுக்கங்களுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்டுள்ளனவா? என்பதை இவ்வகைப் படுத்தலின் மூலம் அயிந்துகொள்ள முடியும்.

கட்டடங்களின் அடித்தளம் உரிய முறையில் இடப்பட்டுள்ளனவா என்பதன் அடிப்படையில் ஆபத்தான நிலையிலுள்ள கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்