சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் ஜுன் 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.