day, 00 month 0000

30ம் திகதி விடுமுறை குறித்து மற்றுமொரு விசேட அறிவிப்பு..! இவர்களுக்கும் விடுமுறை

ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வங்கி விடுமுறையாக அரசாங்கள் அறிவித்திருந்தது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர், 

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஜூன் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சு இணைந்து இம்மாதம் 30ஆம் திகதியை வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்