day, 00 month 0000

அக்சன் பாம் செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கு பொறுப்புக்கூறல்..! இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள்- பிரான்ஸிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

சிறிலங்கா ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர், பிரான்ஸ் அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 17 பிரான்ஸ் உதவி நிறுவன (ACF) செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கு இன்றுவரை நீதி வழங்காமல் இருப்பதைக் குறிப்பிட்டு, அதற்கான விசாரணைக்கு சிறிலங்கா ஜனாதிபதியை வலியுறுத்தும்படி கேட்டுள்ளார்.

மேலும் இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் சார்லஸ் பெட்றியின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் 70,000 பொது மக்கள் கொல்லப்பட்டதும், மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களும் போர்க்குற்றங்களும் நடைபெற்றதற்கு நம்மத்தகுந்த சாட்சியங்கள் இருந்தமையையும் சுட்டிக் காட்டி, அத்துடன் பேர்லின் மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலை தமிழ் மக்களிற்கு எதிராக நடைபெற்றது என்பதையும் சுட்டிக்காட்டி இவ் சர்வதேச குற்றங்களைப் புரிந்த எவருமே நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பதையும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வதேச நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இச் சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை நடத்தப்ப்ட வேண்டும் என்ற தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை 30/1தீர்மானம் சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறை காத்திரமான ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹீசைன் தனது 2015 ஆம் ஆண்டு அறிக்கையிலும் கடந்த வாரம், இம் மாதம் நடைபெற இருக்கின்ற சிறிலங்கா தொடர்பான உலகளாவிய கால ஆய்வு (universal periodic review)தொடர்பாக லக்ஸம்பேர்க், போட்ஸ்வானா, ஈக்வடர், கிழக்குத் தீமோர் ஆகிய நாடுகள் சிறிலங்கா ரோம் உடன்படிக்கையில் கையொப்பம் இட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறி உள்ளதையும் இக் கடிதத்தில் குறிப்பிட்டு,சிறிலங்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை பின்னோக்கி (retro active) ஏற்றுக் கொள்ளும்படி அழுத்தம் கொடுக்குமாறு கோரியிருந்தார். அவ்வாறு சிறிலங்கா பின்னோக்கி (retro active) நியாயாதிக்கத்தை ஏற்றுக் கொள்வது, 2006 ஆம் ஆண்டு இடம் பெற்ற பிரான்ஸ் நிறுவன செயற்பாட்டாளர்களின் படுகொலைக்கும், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 70,000 பொது மக்களுக்கும் நீதி வழங்குவற்கு வழிவகுக்கும் என கடித்தத்தில் சுட்டிக் காட்டினார்.
 
தமிழ் தேசியப் பிரச்சனை பொது வாக்கெடுப்பு மூலமே தீர்க்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டையும் சிறிலங்கா ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும். New Caledonia வில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தியமைக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு பராட்டு தெரிவித்து, பொதுசன வாக்கெடுப்பின் பிறப்பிடம் பிரான்ஸ் என்பதையும் சுட்டுக் காட்டியிருந்தார்.
 
மேலும், சிறிலங்காவின் 6 வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம், அமைதி முறையில் தனிநாடு கேட்பதை தடை செய்வது சுதந்திரத்திற்கு முரணானது என்றும், தமிழ் மக்கள் தமது அரசியல் பெரு விருப்பினைத் தெரிவிப்பதற்கான அரசியல் வெளியை முடக்குவதையும் சுட்டிக் காட்டி 6வது அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கும்படி கோருமாறு கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.
 
பிரான்ஸ் அதிபருக்கு கடிதம் அனுப்பிய அதே சமயம் Paris Club இற்கும் அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில், சிறிலங்காவின் கடன் மீள் சீரமைப்பையும், மேலதிக நிதி உதவியையும் சிறிலங்காவின் இராணுவ செலவீனங்களை குறைப்பதும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலையும் இணைக்கும்படி கடிதத்தில் கேட்டிருந்தார் அக் கடிதத்தில் பொருளாதார சரித்திரவியளாளர் பொருளாதாரம் அரசியலுடனும் பிணைந்துள்ளது என சுட்டிக் காட்டி, பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில் அரசியலே ஆகும் என கூறியிருந்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்