day, 00 month 0000

கனடாவில் உயிருக்கு போராடும் இரண்டு சிறுமிகள்! சட்டத்தை மீறியதால் விபரீதம்

கனடாவில் சட்டத்தை மீறி வாகனத்தை ஓட்டி சென்ற இரண்டு சிறுமிகள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.

தெற்கு அல்பர்டாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

10 மற்றும் 3 வயதுடைய இரண்டு சிறுமிகள் OHV வாகனத்தில் பயணித்த நிலையில் டிரக் வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

பொலிஸார் கூறுகையில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.

விபத்து நடைபெற்ற சமயத்தில் இரண்டு சிறுமிகள் மட்டும் தான் வாகனத்தில் இருந்தனர்.

அவர்களுடன் பெரியவர்கள் யாராவது வழிநடத்த உடன் இருந்தார்களா என்ற தகவல் தெரியவில்லை என கூறியுள்ளனர்.

ஆல்பர்ட்டாவின் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட எவரும் OHV வாகனத்தில் சவாரி செய்யும் போது பெரியவர்களால் கண்காணிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்