புனித திருத்தந்தை பிரான்சிஸ் வயிற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திகான் தெரிவித்துள்ளது.
இவருக்கு பெருங்குடலில் காணப்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக லேபரோடமி என்ற திறந்த வயிற்று அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் கடந்த சில நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
86 வயதான போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.