போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர் சிறுமியருக்காக கனடிய தம்பதியினர் குதிரை வண்டி சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு இரண்டு வாரங்கள் குதிரை வண்டியில் சவாரி செய்துள்ளனர்.
உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த குதிரை வண்டி சவாரி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்மன்ட் ஜெரோம் மற்றும் அவரது மனைவி கெல்லி ஆகியோர் இந்த சவாரியை மேற்கொண்டுள்ளனர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட குதிரை வண்டியைக் கொண்டு இந்த தம்பதியினர் சவாரி செய்துள்ளனர்.
ஜெரோமின் மனைவி கெல்லி ஓர் உக்ரைனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களுக்கு நன்கொடை திரட்டும் நோக்கில் இந்த குதிரை வண்டி சவாரி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.