// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பீஹாரில் 1710 கோடி செலவில் நிர்மாணிக்கப்படும் பாலம் இடிந்து வீழ்ந்தது

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், கங்கை நதியின் மீது நிர்மாணிக்கப்பட்டுவந்த பாலமொன்று நேற்று மாலை இடிந்துவீழ்ந்துள்ளது.

பாகல்பூர் எனும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த இடிந்து விழுவது கெமராக்களில் பதிவாகியுள்ளன. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

ஒரு வருடத்தில் இரண்டாவது தடவையாக இப்பாலம் இடிந்துவீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2014 ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதீஷ் குமார் இப்பாலத்தை திறந்து வைத்திருந்தார்.

கடந்த வருமும் இப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது.

தற்போது 1,700 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ககாரியா, பாகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கங்கை நதியில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படுகிறது.

இந்நிலையில், இப்பாலம் இடிந்தமை குறித்து விசாரணை நடந்த முதலமைச்சர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட  மாநில எதிர்க்கட்சித் தலைவரான, பிஜேபியைச் சேர்ந்த சமரத் சௌதரி, முதலமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான பீஹார் அரசாங்கத்தில் ஊழல் பரவலாகியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்