// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வடக்குக்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்?

வடக்கு மாகாண சபைக்கு காணி அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்காக மாகாண சபை முதலமைச்சர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அடங்கிய அறிக்கைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, வடமாகாண சபை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்து வினவியபோது, ​​கூட்டமைப்பினர் இந்திய பிரதமரை சந்திப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும், அதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பிரித்தானிய விஜயத்தின் பின்னர் இந்தியப் பிரதமரையும் சந்திக்க உள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்