// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்தியாவில் ரயில் தடம்புரண்டு கோர விபத்து; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் ​வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான புகையிரதபெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்இ ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்