எல் சால்வடாரில் மார்ச் 2022 இல் அவசரகால அதிகாரங்கள் நிறுவப்பட்டதில் இருந்து அங்குள்ள சிறைச்சாலையில், குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் குழுவான கிறிஸ்டோசல் வெளியிட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் கைது செய்யப்பட்டபோது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்காக தண்டிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான மரணங்கள் சித்திரவதை மற்றும் கடுமையான காயங்களின் விளைவாக ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்பேர் வன்முறையின் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உயிரிழந்தவர்களுக்கு மருத்துவ உதவி, உணவை வேண்டுமென்றே வழங்காமல் இருந்தமையால் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.