day, 00 month 0000

கனடாவில் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்யும் பல்கலைக்கழகம்

கனேடிய பல்கலைக்கழகமான ஒன்றாரியோவின் வாட்டர்லூ பல்கலைக்கழகம் மாணவர்களின் வகுப்பு கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் வகுப்புக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் இரண்டு பூர்வகுடியின மக்கள் சமூகத்தைச் பிரதிநிதித்துவம் செய்யும் மாணவர் சமூகத்திற்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

மிஸ்ஸிசாகாவின் கிரெடிட பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின பகுதியின் சிக்ஸ் நேஷன் பழங்குடியின மக்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இவ்வாறு சட்டண வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றை தொடரக்கூடிய தகுதியுடைய மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

மாணவர்களுக்கு வகுப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்