ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாபோரிஜியா அணுமின் நிலையத்தில் பாரிய விபத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிரித்துள்ளது.
மொஸ்கோவால் கைப்பற்றப்பட்ட தனது பிரதேசத்தை மீட்பதற்காக உக்ரைன் தீவிரப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த நகர்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரைனின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சாபோரிஜியா ஆலை, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையமாகும்.
உக்ரைனின் எதிர்த்தாக்குதலுக்கு முன்னதாக, சாபோரிஜியாவைச் சுற்றி அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் அணுசக்தி பேரழிவு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இவ்வாறான முக்கிய பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்களுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி இரு தரப்பினரும் மீண்டும் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.