பிரான்ஸில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 45,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்தில் 9 தொன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 5 தொன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த ஒருவருடத்தில் 45,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இவ்வருடத்தில் மட்டும் 18,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் பதிவாகும் போதைப்பொருள் விற்பனைகளில் 40 வீதமானவை பரிசிலும் அதன் புறநகர்களிலும் பதிவாகுவதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.பிரான்ஸில் ஒரு வருடத்தில் 45,000 பேர் கைது