// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 186 என்கவுண்டர் மரணங்கள்: அதிர்ச்சி ஏற்படுத்தும் ரிப்போர்ட்

யோகி ஆதித்யநாத் 2017ம் ஆண்டு பதவியேற்றது முதல் , இதுவரை 186 குற்றவாளிகள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்த புலனாய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச், 2017ம் ஆண்டு யோகி ஆத்தியநாத் பதவியேற்றது முதல் தற்போது வரை 186 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு குற்றவாளி காவல்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த 6 வருட ஆட்சியில், குற்றவாளிகளை காலில் சுடுவதால் காயமடைந்தோர் எண்ணிக்கை 5,046 ஆக உள்ளது.  15 நாட்களுக்கு ஒருமுறை 30-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் சுடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக அதிகார்ப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் 186 பேர் காவல்துறை நடத்திய என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 96 குற்றவாளிகள் கொலை குற்றம் செய்துள்ளனர். 2 பேர் பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ குற்றம் செய்தவர்கள்.

இந்நிலையில் 2016 முதல் 2022 வரை குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக உத்தர பிரதேச காவல்துறை கூறுகிறது. கொள்ளை சம்பவங்கள் 82 % குறைந்துள்ளது என்றும் கொலை குற்றங்கள் 37 % குறைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் என்கவுண்டர் மரணங்கள் தொடர்பாக, உத்தரபிரதேச காவல்துறை சிறப்பு டி.ஜி பிரஷாந்த் குமார் கூறுகையில்  “ குற்றச் சம்பவங்களை குறைப்பதற்காக நாங்கள் ஒருபோதும் என்கவுண்டர் நிகழ்த்தவில்லை” என்று கூறினார்.

ஆனால் அதிகார்ப்பூர்வ ஆவணத்தை பொருத்தவரை, என்கவுண்டர் மரணங்கள் தொடர்பாக எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை என்பது உறுதியாகிறது.

எல்லா என்கவுண்டர் மரணங்களுக்கும், மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறும். இந்நிலையில் 186 என்கவுண்டரில் 161 என்கவுண்டர் மரணங்கள் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் இந்த விசாரணையில் எந்த எதிர் கேள்வியோ அல்லது என்கவுண்டர் மரணத்திற்கு எதிரான எந்த மறுப்பும் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் என்கவுண்டர் மரணங்கள் நடைபெற்றால், வழக்கை முடித்து வைக்க அறிக்கையை காவல்துறையினர் வழங்க வேண்டும். இந்நிலையில் 186 என்கவுண்டர்களில் 156 வழக்குகளை முடித்துவைக்கும் அறிக்கை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இதில் 141 என்கவுண்டர் வழக்குகளை நீதிமன்றம் முடித்துவைக்க ஒப்புக்கொண்டுள்ளது. 15 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

என்கவுண்டர் தகவலை வைத்து பார்க்கும்போது, மீரட் பகுதியை சேர்ந்த காவல்துறையினரால் மட்டும் 65 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல வாரணாசி காவல்துறையினரால் 20 மற்றும் ஆக்ரா காவல்துறையினரால் 14 பேர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

’ஆப்ரேஷன் லங்கடா ’ என்ற காவல்துறை நடவடிக்கையில் மார்ச் 2017 முதல் ஏப்ரல் 2023ம் வரை 5,046 பேர் காலில் சுடப்பட்டுள்ளனர். இதிலும் மீரட் பகுதிதான் முதல் இடத்தில் உள்ளது. இந்த பகுதியில் 1,752 தேடப்பட்ட குற்றவாளிகள் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீரட் பகுதி மட்டும், என்கவுண்டர் மற்றும் குற்றவாளிகளை சுடுவதில் முதல் இடத்தில் உள்ளது என்று உத்தர பிரதேச காவல்துறை சிறப்பு டி.ஜி பிரஷாந்த் குமாரிடம் கேட்டபோது , “ மேற்கு உத்தர பிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் எப்போதுமே அதிகம் நடக்கும்” என்று கூறினார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள நன்தன்பூர் பகுதியில் வசித்து வந்த குர்மீட் என்பவர்தான்,  யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட முதல் நபர். இச்சம்பவம் மார்ச் 31, 2017 நடைபெற்றது. கடைசியாக கடந்த மே 14ம் தேதி உமேஷ் சந்திரா ( 27 வயது ) , ரமேஷ் ( 40 வயது ) இருவரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பெட்ஜீத் என்ற கான்ஸ்டபிளை கடந்த மே 9ம் தேதி கொலை செய்ததாக கூறப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்