// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கனேடிய பிரதமர் அறிக்கை தொடர்பில் அலி சப்ரியின் கண்டனத்திற்கு சாணக்கியன் பதிலடி

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆயுதப் போர் மற்றும் தமிழனப் படுகொலை தொடர்பில் கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமான செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் குறித்த விடயத்தினை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கனேடிய பிரதமர் 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலை தொடர்பில் ஓர் அறிக்கையை முன்வைத்துள்ளார்.

14 ஆண்டுகள் கடந்த பின்னும், இனவழிப்பு தொடர்பில் ஒரு நாடு அறிக்கை சமர்ப்பித்துள்ளது எனும் விடயம் ஆராயப்பட வேண்டியது.

அதை விட்டு இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கனேடிய பிரதமர் விடுத்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதை விடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குரிய நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் கோட்டாபயவிற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனும் வகையில் அலி சப்ரி செயற்படுகின்றார்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்