// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ரணிலை இந்தியா ஏன் இதுவரை அழைக்கவில்லை?; வெளியான காரணம்

இலங்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய வலியுறுத்தியுள்ள போதும் அதனை நடைமுறைப்படுத்தாததன் காரணமாவே இதுவரையில் இந்தியாவிற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்கவை, இந்திய அரசாங்கம் அழைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான, கவனம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017ஆம் ஆண்டுடன் மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றை மீண்டும் செயற்படுத்துவதற்கான தேர்தலை நடத்துவதற்கு இதுவரை எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலை, விருப்பு மற்றும் விகிதாசார முறையில் நடத்துவதற்கான சட்டமூலம் 2017ஆம் ஆண்டு நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திடம் இந்தியா முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இந்திய அரசாங்கம் அவரை உத்தியோகபூர்வ விஜயத்திற்கு அழைக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையே இதற்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என அரசாங்கத்தின் மற்றுமொரு குழு கருத்து வெளியிட்டுள்ளது. 

அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதால், அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்