// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்ப்பு ….! சீன எல்லையில் இணைய சேவையை அதிகரிக்கின்றது இந்தியா

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது.

இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை செயற்படுத்தும் 254 கோபுரங்களை மத்திய தகவல், தொழில்நுட்பம், மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில், கிரண் ரிஜிஜு மற்றும் முதல்வர் பெமா காண்டு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நடவடிக்கையானது கிராமங்களைச் சுற்றியுள்ள குறைந்தது 70,000 குடியிருப்பாளர்களுக்கு மிகவும் தேவையான அதிவேக இணைய இணைப்பை வழங்குவதை நோக்காகக் கொண்டதாகும்.

சீனா தனது உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதால், இந்நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக தவாங் போன்ற எல்லையோர மாவட்டங்களில் நிலைமை வேகமாக மோசமாகி வருகிறது, இவ்வாறான நிலையில் பிரதமர் மோடி அரசின் குறித்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போருக்குப் பிறகு, எல்லை மாவட்டமான தவாங் எப்போதும் விளிம்பில் நிலையிலேயே உள்ளது. சீன எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாங், மூலோபாய ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தவாங்கின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 50,000 ஆகும், வகமான இணையம் கிடைப்பது அம்மக்களுக்கு மட்டுமல்ல, அப்பிரதேச நிர்வாகத்திற்கும் அவசியமாகும், ஏனெனில் இது மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் முன்னேற்றத்தின் திசையில் ஒரு பெரிய படியாகும் எனவும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்