// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கிழக்கு மாகாண ஆளுநரை நீக்காதீர்கள்;கடும் போக்குவாத சிங்கள அமைப்பு போர்க்கொடி

கிழக்கு மாகாண ஆளுநராக, மக்களிடம் உரையாற்றுவது இதுவே கடைசி தடவையாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட் கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்ற வெசாக் பண்டிகையில் கலந்து கொண்ட பின்னர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கும் தீர்மானத்திற்கு  கடும் போக்குடைய சிங்கள தேசிய வாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம், கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் நேற்றையதினம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதிய ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தயாகமகே, பாலிய ரங்கே பண்டார, நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்