// print_r($new['title']); ?>
day, 00 month 0000

நியூஸிலாந்துடனான வெற்றியில் அசத்தினார் பாபர் அஸாம்

நியூஸிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் பாபர் அஸாம் குவித்த அபார சதத்தின் உதவியுடன் 102 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது.

அஸாம், 117 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பெற்றதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விரைவாக 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர் என்ற மைல்கல் சாதனையையும் நிலைநாட்டினார்.

தனது 18ஆவது ஒருநாள் சதத்தைப் பெற்ற பாபர் அஸாம், 97ஆவது இன்னிங்ஸில் 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் சார்பாக 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 14ஆவது வீரர் அஸாம் ஆவார். பாகிஸ்தான் சார்பாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இன்ஸாமம் உல் ஹக் 11,701 ஓட்டங்களுடன் முதலாம் இடத்தில் இருக்கிறார்.

பாபர் அஸாமைவிட பாகிஸ்தானின் இந்த வெற்றியில் ஷான் மசூத், அகா சல்மான் ஆகியோரது சிறந்த துடுப்பாட்டங்களும் உசாமா மிர், மொஹமத் வசிம், ஹரிஸ் ரவூப் ஆகியோரது பந்துவீச்சுகளும் முக்கிய பங்காற்றின.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 - 0 என முன்னிலையில் இருக்கும் பாகிஸ்தான், ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான ஐசிசி தரவரசையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசைப்படுத்தலை 2005இல் உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்த பின்னர் பாகிஸ்தான் முதலாம் இடத்தை அடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் பாகிஸ்தால் 2018 ஜனவரியிலும் 2022 ஜூனிலும் 3ஆம் இடத்தைப் பெற்று அதன் அதிசிறந்த தரவரிசையைக் கொண்டிருந்தது.

நியூஸிலாந்துடனான நான்காவது போட்டியில் ஷான் மசூதுடன் 2ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களையும் அகா சல்மானுடன் 4ஆவது விக்கெட்டில் 127 ஓட்டங்களையும் இப்திகார் அஹ்மதுடன் 6ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களையும் பாபர் அஸாம் பகிர்ந்தார்.

நியூஸிலாந்து சார்பகா அணித் தலைவர் டொம் லெதம், மார்க் செப்மன் ஆகிய இருவரே துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

பாகிஸ்தான் 50 ஓவர்களில் 334 - 6 விக். (பாபர் அஸாம் 107, அகா சல்மான் 58, ஷான் மசூத் 44, இப்திகார் அஹ்மத் 28, ஷஹீன் ஷா அப்றிடி 23 ஆ.இ., மெட் ஹென்றி 65 - 3 விக்.)

நியூஸிலாந்து 43.4 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 232 (டொம் லெதம் 60, மார்க் செப்மன் 46, டெறில் மிச்செல் 34, உசாமா மிர் 43 - 4 விக்., மொஹமத் வசிம் 40 - 3 விக்., ஹரிஸ் ரவூப் 37 - 2 விக்.)


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்