// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தையிட்டி காணிகள் தொடர்பில் வெளியான கடிதங்கள் போலியானது

யாழ்ப்பாணம், தையிட்டியில் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் ஆரம்பித்த போராட்டத்தைக் குழப்ப வேண்டுமென்பதற்காகச் சிலர் போலியான கடிதங்களை அவசர அவசரமாக எழுதி வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த போலியான கடித்ததை எழுத்தியவர்கள் பல விடயங்களை கவனிக்கத் தவறியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறு போலியான கடிதங்களை உருவாக்கும் பல விடயங்களை அவதானிக்குமாறு கூறிய சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாவதாக திகதிகளைக் கவனிக்க வேண்டும் என்றும் 2019இல் கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை என்றும் க.சுகாஷ் சுட்டிக்காட்டியிருந்தார்.

2019இல் வழங்கப்பட்ட கடிதத்தில் 5வது நபராக உள்ள சிவகுமார் என்பவரின் தொலைபேசி இலக்கம் 11 இலக்கங்களைக் கொண்டிருப்பதாகவும் பார்த்து எழுதும்போது ஈயடிச்சான் கொப்பி போன்று உள்ளதாக குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல விடயங்களை சுட்டிக்காட்டிய க.சுகாஷ் இவற்றை திருத்தி எதிர்காலத்தில் வெளியிடுமாறு, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்