கனடியத் தமிழர் பேரவையானது “ரைஸ் ஹியூமானிற்றி” (Rise Humanity) என்ற அமைப்பின் ஆதரவோடு இந்தியாவின் தமிழ்நாட்டில் கடின நிலையில் வாழும் 350 குடும்பங்களுக்கு “கோவிட் -19” உணவு நிவாரணத்தை வழங்கியுள்ளது.
இறுக்கமான “COVID-19” விதிமுறைகள், விநியோகச் செயல்முறைகளைத் தாமதப்படுத்தினாலும் உணவு நிவாரண விநியோகம் “Rise Humanity” குழுவினரால் செய்து முடிக்கப்பட்டது. நான்கு பேர் கொண்ட சராசரி குடும்பம் ஒன்றுக்கு 7 முதல் 10 நாட்கள் வரை போதுமான உணவு இந்த விநியோக முறைமைக்கூடாக வழங்கப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள பாறை, தாலிஞ்சு, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் ஆகிய பழங்குடி குக்கிராமங்களுக்கு 250 நிவாரண உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. யூலை 26, 2020 அன்று வனத் துறைக் காவலர்கள் மற்றும் “Osai” என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் ஆதரவோடு இந்த உணவு விநியோகம் செயல்படுத்தப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டத்தின் கௌரிப்பட்டியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமுக்கு 2020 யூலை 25 ஆம் தேதி 100 நிவாரண உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த உணவு வழங்கல் “OFERR” அமைப்பைச் சேர்ந்த திரு. இரட்ணராஜசிங்கம் மேற்பார்வையில் நடைபெற்றிருந்தது.