Site Logo

இரட்டை சதம் விளாசி இந்திய ஜாம்பவான்கள் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

Views: 65

தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார்.

இரட்டை சதம் விளாசி இந்திய ஜாம்பவான்கள் சாதனைகளை தகர்த்த சுப்மன் கில்

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார்.