ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதி தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க மற்றும் ருவான் விஜேவர்த்தனவின் பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இதையடுத்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் நடந்த இரகசிய வாக்கெடுப்பில் ருவான் வெற்றிபெற்றார்.
ருவானுக்கு 28 வாக்குகளும், ரவி கருணாநாயக்கவிற்கு 10 வாக்குகளும் கிடைத்தன.
கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி தலைமையை ஏற்ற பின்னர், அந்த வெற்றிடத்திற்கு ருவான் நியமிக்கப்பட்டுள்ளார்.