கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட மூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடியிருந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவினை எட்டியதாக நாடாளுமன்ற பிரதி கொறடா டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதோடு வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் குறித்து எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறும். அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.