தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல இடங்களில் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் தேவைப்பட்டால் இந்த இடங்களில் தனிமைப்படுத்தலை நீடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் காரணமாக பாதிக்க்பபட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சகாக்கள் குறித்து புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பல இடங்களை தனிமைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவு நோயாளர்கள் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்களுக்கும் மருந்து உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த பகுதிகளில் நடமாடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.