நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 99 கைதிகளுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 89 பெண் கைதிகளும் 10 ஆண் கைதிகளும் அடங்கியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் போகம்பர சிறைச்சாலையில் 6 பேருக்கும் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.