கொரோனா வைரசிற்கான முதலாவது தடுப்பு மருந்து 90வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு பாதுகாப்பளிக்க கூடியது என்பது ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது .
முதலாவது தடுப்பு மருந்தினை உருவாக்கியபிபைசர் பையோன் டெக் நிறுவனம் இதனை விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானத்திற்கான பெரும் வெற்றி என தெரிவித்துள்ளது.
ஆறு நாடுகளை சேர்ந்த 435000 பேரிடம் இந்த மருந்தினை பரிசோதனை செய்தததில் என தெரிவித்துள்ள நிறுவனம் இந்த மருந்து குறித்து எந்த கரிசனை வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த மிக முக்கியமான தகவலை தொடர்ந்து எப்போது யாருக்கு இந்த மருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மாத்திரமே இந்த வருடம் கொரோனா வைரஸ் மருந்தினை பெறுவார்கள் என பிபிசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களிற்கே இந்த வருடம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்ககூடும்.
பிபைஜர் பயோன்டெக் நிறுவனங்கள் மருந்துகளை அவசரமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை பெறும் முயற்சிகள் நவம்பரில் இடம்பெறும் அதற்காக போதுமான தரவுகள் தயாரானவுடன் இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளன.
இந்த மருந்துகளிற்காக அனுமதி வழங்கப்படும் வரை உலக நாடுகள் இந்த மருந்தினை பயன்படுத்த முடியாது.
.இந்த வருட இறுதிக்குள் 50 மில்லியன் டோஸ் மருந்தினையும் அடுத்த வருட இறுதிக்குள் 1.3 பில்லியனையும் தயாரிக்க முடியும் என இரு நிறுவனங்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் இரண்டுடோஸ் மருந்துகள் தேவை.
யாருக்கு கிடைக்கும்
அனைவருக்கும் நேரடியாக இந்த மருந்துகள் கிடைக்கப்போவதில்லை ஒவ்வொரு நாடும் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என தீhமானிக்கவுள்ளன.
மருத்துவமனை பணியாளர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம் , அவர்கள் மிகவும் பலவீனமானவர்களுடன் பணியாற்றுவதே இதற்கு காரணம்.கொரோனா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படக்கூடிய முதியவர்களுடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்த மருந்து கிடைக்கலாம்.
பிரித்தானியாவில் முதியவர்களுக்கும் அவர்களுடன் முதியோர் இல்லங்களில் பணியாற்றுபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படலாம்.