புவிசார் அரசியல் சக்திகளின் கால்பந்தாட்ட மைதானமாக இலங்கை அமையாது என வெளிவிவகார செயலாளர் அட்மிரால் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக அமைந்துள்ள இலங்கையை உலகின் பலம் பொருந்திய நாடுகள் ஓர் களமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புவிசார் அரசியல் சக்திகளின் அதிகார போட்டிக்கு இலங்கை மைதானமாக அமையாது எனவும், அவ்வாறு போட்டி நடைபெற்றால் குறைந்தபட்சம் அதன் மத்தியஸ்தராக இலங்கை இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நலன்களை கருத்திற்கொண்டு கடல்சார் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு அதிகார சக்திகள் தங்களுக்கு இடையில் மோதிக் கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.