வவுனியா ஓமந்தைப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.