ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் இடம்பெறவுள்ளது.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதில் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதுதவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தநிலையில், இது தொடர்பாகவும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.