அடுத்த மாதம் முதல் வழமைபோன்று பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, தரம் 10, 11, 12 மற்றும் 13 வகுப்புக்களுக்கான பாடசாலைக் காலம் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
அனைத்து மாகாண பிரதான செயலாளர்களுக்கும், மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் இது குறித்து கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, மேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இந்த மாதம் வரை மாத்திரம் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாடசாலைகளுக்கு மாணவர்களை வழமை போன்று அழைப்பதற்கான இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் இன்று (25) ஆராயப்படவுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.