மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (08) பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
அவருக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியது.
அவரால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை ஆராய்ந்தபொழுதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதில் சிக்கல் இல்லையென அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய அவர் இன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு கூடும் பாராளுமன்ற அமர்வில் அவர் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
இந்த மனு மீண்டும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது