ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பை மறு சீரமைக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கேட்டுள்ளார்.
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்சியின் யாப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததையும் அவர் நினைவுப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேசியுள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பெரும் பான்மை, சிறுபான்மை மக்களின் ஆலோசனைக்கு அமையவும், ஒன்றிணைந்த நோக்கில் அந்த யாப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு உரிய தலைமைத்துவ சபை இருக்க வேண்டும் எனவும், அதனூடாக எடுக்கப்படும் சகல முடிவுகளும் ஒற்றுமையாக எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரரியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதாக உறுதியளித்த தேசியப் பட்டியல் உறுப்புரிமை தொடர்பான உறுதிமொழியை மறுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.