மானிட்டோபா மாகாணத்தை வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள்

ஆபத்தை விளைவிக்கும் கடும் குளிரான காலநிலைக்கு மத்தியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவொன்று எல்லை ஊடாக நடை பயணமாக மானிட்டோபா மாகாணத்தை வந்தடைந்துள்ளனர். பெண்ணொருவர் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு கனடா மானிட்டோபா மாகாணத்திற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 22 மணிநேர நடை பயணத்தின் பின்னர் தாம் கனடாவை வந்தடைந்ததாக 25 வயதுடைய சோமாலியர் ஒருவர் குறிப்பிட்டார். மேலும், கனடாவை வந்தடைந்தமையை தாம் மிகுந்த பாதுகாப்பாக உணர்வதாகவும், ... மேலும்

டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களுக்கு கனடாவில் கடுமையான பாதுகாப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களுக்கு கனடாவில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ராம்பின் புதல்வர்களான டொனால்ட் ட்ராம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ராம்ப் ஆகியோர் கனடவின் வான்கூவருக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு உளவுப்படையினர் கடுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ராம்ப் ஹோட்டல் மற்றும் கட்டடமொன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருவரும் கனடாவிற்கு சென்றுள்ளனர். அமெரிக்க புலானாய்வுப் பிரிவினர் கனேடிய பொலிஸாரும் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர். Please follow ... மேலும்

கனடாவில் துயரம்: நோய் வாய்ப்பட்ட மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்

கனடாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அங்குள்ள நீதிமன்றம். கனடாவின் கால்கரி பகுதியில் குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் Emil மற்றும் Rodica Radita தம்பதியினருக்கு 8 குழந்தைகள். அதில் ஒருவர் 15 வயதான அலெக்ஸாண்ட்ரு. சிறுவன் அலெக்ஸாண்ட்ருவுக்கு சிறுவயதைலேயே நீரிழிவு நோய் தாக்கியுள்ளது. ஆனால் போதிய மருத்துவ ... மேலும்

மார்க்கம்-தோன்கில் லிபரல் கட்சி நியமன வேட்பாளர், தெரிவுத் தேர்தலை நீதியாக நேர்மையாக நடத்துமாறு கோருகிறார்

(மார்க்கம், ஒன்) மார்க்கம் – தோன்கில் தொகுதியில் லிபரல் கட்சி நியமன வேட்பாளர் ஜுனிற்றா நாதன் லிபரல் வேட்பாளர் தெரிவுத் தேர்தலில் உள்ள பாகுபாடுகள், அநீதிகளை வெளிக்கொணரும் முகமாக ஓர் ஊடக மாநாட்டை நடத்தவுள்ளார். ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு சார்பாகவும், ஏனைய வேட்பாளர்களுக்கு எதிராகவும் லிபரல் கட்சியின் செயற்பட்டை வெளிப்படுத்தவுள்ளார். “கனடியப் பிரதமர் மாண்புமிகு ஜஸ்ரின் ரூடோ அவர்களது தலைமையின் கீழ் வழங்கப்பட்ட உறுதிக்கு ஏற்ப மார்க்கம்-தோன்கில் தொகுதி மக்களுக்கு, நீதியான நேர்மையான முறையில் தங்கள் வேட்பாளரைத் ... மேலும்

சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைந்த இரு துருக்கியர்கள் கைது

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வைத்து துருக்கி இனத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரால் (RCMP) கைது செய்யப்பட்டதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குள் நுழைந்ததாகவும் அதனாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த கனேடிய பொலிஸார், ... மேலும்

கனடாவில் பனிபொழிவு ஏற்படக்கூடும்

கனடாவில் உள்ள Fraser Valley  மற்றும்  East Vancouver Island ஆகிய பகுதிகளில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனிபொழிவு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் அடை மழை பெய்யக்கூடும் எனவும் அதிகாலை வேளையில் பனிபொழிவு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிபொழிவு அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள பொருட்களை கூட தெளிவாக பார்க்க முடியாத வகையில் இருக்கும் என தெரிவித்த ... மேலும்

தொல்காப்பியர் தமிழ் சங்க விருது பெற்ற கனடா தமிழ் கல்லூரி

தமிழ்நாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் வழங்கும் தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது இவ்வாண்டு கனடா தமிழ் கல்லூரித் தலைவர் வி.சு.துரைராசாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டு காலமாகக் கனடாவில் இளம் தலைமுறையினரிடையே தமிழ்மொழியை நிலைபெறச் செய்ய கனடா தமிழ் கல்லூரி ஆற்றிவரும் பணியை பாராட்டியே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதுடன், தமிழ் வளர்ச்சிக்காக ஒரு லட்சம் இந்திய ரூபா பரிசுத் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Please follow and like us:

கனடாவில் பரவும் அபாயகரமான நோய்: என்ன செய்ய போகிறது அரசு?

கனடாவில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுள்ளது. கனடாவில் Ontario உட்பட சில மாகாணங்களில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருகிறது. Ontarioவில் மட்டும் 2017ல் இது வரை 19 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயான இது எச்சில், ஒருவரின் சுவாச மூச்சின் மூலமாக மற்றவர்களுக்கு அதிகம் பரவுகிறது. இந்த வருடம் இந்த நோய் தாக்கியவர்கள் எல்லோரும் 18லிருந்து ... மேலும்

குடியேற்றவாசிகள் ரொறன்ரோவுக்கு செல்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்

கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் தற்போது துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மனிடோபா மற்றும் கியூபெக்கிற்கு செல்லும் குடியேற்றவாசிகள் ரொறன்ரோவிற்கு செல்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கனேடிய அதிகாரிகள் சிலர், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரொறன்ரோ அதிகாரிகள் இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து அதிகளவான குடியேற்றவாசிகள் ரொறன்ரோவை வந்தடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ... மேலும்

கனடாவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை தொடங்கியது

கனடாவின் வைட்ஹோர்ஸ் எனும் பகுதியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 56 வயதுடைய ஆண் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் எனினும் அவருடைய உயிருக்கு எதுவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்