துருக்கியில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜேர்மனிய ஊடகவியலாளர் விடுதலை செய்யப்பட வேண்டும்

துருக்கியில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜேர்மனிய ஊடகவியலாளர் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார். இத்தாலிய வெளியுறவு அமைச்சருடன் ரோம் நகரில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே சிக்மார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “டெனிஸ் யுசெல் (Deniz Yucel) என அழைக்கப்படும் ஜேர்மனிய ஊடகவியலாளர் துருக்கியில் கைதுசெய்யப்பட்டு தண்டனை விதிக்கப்படாது சிறையில் உள்ளார். ... மேலும்

வடக்கு ஈராக்கில் உள்ள குர்தீஷ் போராளிகளை குறிவைத்து துருக்கி இராணுவம் தாக்குதல்

வடக்கு ஈராக்கின் அவாசின் பஸ்யான் (Avasin-Basyan) பகுதியில் உள்ள குர்தீஷ் போராளிகளின் நிலைகள் மீது துருக்கி இராணுவம் தொடர் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளது. குறித்த விமான தாக்குதல்கள் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளதாக துருக்கி இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. துருக்கியின் தென்கிழக்கில் உள்ள குர்தீஷ் போராளிகளுக்கும் துருக்கி படையினருக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்தகாலமாக மோதல்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையிலேயே மேற்குறித்த விமான தாக்குதல்களை துருக்கி முன்னெடுத்துள்ளது. குறித்த ... மேலும்

உதவ முன்வராத இத்தாலி! சுவிஸில் உயிரை விட்ட டிஜே: உருக வைக்கும் இறுதி வார்த்தை

சுவிட்சர்லாந்தில் இத்தாலி டிஜே ஒருவர் உதவி தற்கொலைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இத்தாலியை சேர்ந்த 40 வயதான டிஜே Fabiano Antoniano என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதை, இத்தாலியின் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் Marco Cappato உறுதி செய்துள்ளார். Fabiano Antoniano, கடந்த 2014ம் ஆண்டு பயங்கர கார் விபத்தில் சிக்கயுள்ளார். இதில், அவரின், உடல் முழுவதும் முடங்கி பார்வை பறிபோகியுள்ளது. இதை ... மேலும்

ஜேர்மனியில் 3,500 குடியேறிகள்; மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் பதிவு

ஜேர்மனியில் தங்கி இருக்கும் குடியேறிகள்; மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  தாக்குதலுக்கு ஆளானவர்களில் 43 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலமட்பெயர்ந்து வருகின்றனர். பிரான்ஸ் ... மேலும்

பிரான்ஸில் போலி மருந்து, மாத்திரைகள் விற்ற பிரித்தானியர்கள்!

சட்டத்துக்கு விரோதமாக மருந்து, மாத்திரைகளை மக்களுக்கு விற்ற இருவரை பிரான்ஸில் பொலிசார் கைது செய்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமாக உரிமம் பெறாத மருந்து மாத்திரைகளை விற்பது பிரான்ஸில் மிகப்பெரிய குற்றமாக கருத்தப்படுகிறது. இந்நிலையில், பிரித்தானியா நாட்டை சேர்ந்த 51 வயதுடைய ஒரு ஆணும், 42 வயதுடையை ஒரு பெண்ணும் சட்டவிரோதமாக மருந்துகளை விற்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வடமேற்கு பிரான்ஸில் தங்கிருந்த இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இது ... மேலும்

பிறப்பு விகித சரிவின் எதிரொலி: ஸ்பெயின் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

ஸ்பெயினில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வகையில் சரிவடைந்துள்ள நிலையில், இதனை சீர் செய்வதற்கு கொள்கை விளக்க தூதுவர் ஒருவரை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது அதன்படி மக்கள் தொகை அதிகரிப்பதன் தேவையை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு மக்கள் தொகை நிபுணரான Edelmira Barreira என்பவரை கொள்கை விளக்க தூதுவராக ஸ்பெயின் அரசு நியமித்துள்ளது ஸ்பெயின் நாட்டு பெண்கள் தங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை ... மேலும்

சிசிலியை வந்தடைந்தனர் 700க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள்!

இத்தாலியக் கடலோரக் காவல் படையினரால் பாதுகாக்கப்பட்ட சுமார் 730 குடியேற்றவாசிகள் நேற்று (சனிக்கிழமை) அகஸ்டா என்ற சிசிலியன் துறைமுகத்தை வந்தடைந்தனர். இதில், அதிகளவான கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் மத்திய தரைக்கடலில் பயணித்த 2750 குடியேற்றவாசிகளை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இது குறித்து ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் பெரும்பாலும், நைஜீரியா, எரித்திரியா மற்றும் ... மேலும்

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஜெர்மனியில் அடைக்கலம் கோரியுள்ளனர்

துருக்கியில் இராணுவ சதிப் புரட்சி முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஜெர்மனியில் அடைக்கலம் கோரியுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 136 பேர் இவ்வாறு அடைக்கலம் கோரியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் இராணுவ சதிப்புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இவ்வாறு 136 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2016 ஓகஸ்ட் மாதம் முதல் 2017 ஜனவரி மாதம் வரையில் இவ்வாறு துருக்கிப் பிரஜைகள் ... மேலும்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா போட்டி?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இணையத்தில் விளம்பரம் ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. ஒபாமா 2017 என்ற தலைப்பில் இந்த பிரச்சார விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஹவாய்யில் பிறந்த ஒபாமாவை தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில் ஒரு மில்லியனுக்கு மேற்ப்பட்டவர்கள் இதில் கையெழுத்திடுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரஞ்சு மக்கள் தீவிரப்போக்குடையவரை தெரிவு செய்ய தயாராக இருக்கிறாம். ... மேலும்

அங்கேலா மெர்க்கெலை சந்தித்தார் ஐரோப்பிய நாடாளுமன்றின் தலைவர் அந்தோனியோ தஜ்ஜானி

ஐரோப்பிய நாடாளுமன்றின் தலைவர் அந்தோனியோ தஜ்ஜானி (Antonio Tajani), நேற்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெலை பேர்லினில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த தஜ்ஜானி, ‘மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களுடைய மனதை வெல்லலாம். மக்களின் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை பெற்றுக்கொடுப்பதன் மூலமே ஜனரஞ்சகவாதத்தை அடைய முடியும்’ என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஐரோப்பிய ... மேலும்