முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி இருவரையும் அணைக்குழுவில் ஆஜராகமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைய இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.