முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
குறித்த அனைவரும் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
குறித்த அனைவரையும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த நடவடிக்கை இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றை வெளியிட்டமை தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.